1. 💘விடுவித்து விடாதே
உன் கயல்விழிகளிலிருந்து எனை....
நான் துடிதுடித்து போவேன்
தரையில் இருக்கும்
மீன் போல !💘
2. 💕என் நித்திரையை
இரையாக்கி
கொள்கிறது....
உன் நினைவு !💕
3. 💞ஓர் வரிக் கவிதை
எழுதுவோம் நாம்
நம் இருவரின்
இதழ்களை இணைத்து !💞
4. 💗ஓசையின்றி பேசிடுவோம்
விழி மொழியில். ....
ஒரு முறை நோக்கிடடி
என் பார்வையை !💗
5. 💔எனக்கு துன்பம் வரும்போது
நினைப்பேன்
உன் நினைவுகளை !💔
6. 💞காற்றே சற்று பொறு ! நாங்கள்
நினைவலைகளால்
விண்ணில் பறந்து வர.....!💞
7. 💖நிலவே ஒளிப்பிழம்பாகு !
அதில் என்னவளின்
அழகினைக் காண.....!💖
8. 💖தென்றலே மிதமாக வீசு !
அதில் என்னவளின்
கார் கூந்தல்
கலையாதிருக்க ...!💖
9. 💞நீ எனை பார்க்கும்
ஒற்றை பார்வையால்
நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்த்து கொண்டது....
நம் காதல் மொழியில். ...!💕
கவிதை: உஷா விஜயராகவன்
0 Comments
We write for you. So Please provide your feedback
Emoji