வண்ணப் பூங்காவாய்
கதிரவனும் நிலவும்
மறைந்து மறைந்து
விளையாடும்
வெண்மேகமோ நீ !
வெண்பட்டாடை உடுத்தி வளையவரும்
நீலமேகமோ நீ !
தொலைதூர
தொடமுடியா பஞ்சுமிட்டாய்
ஆனாயோ நீ !
காதலனாம் வானத்தை தழுவிக்கொண்டு
அன்ன நடை பயிலும்
வான்மேகமோ நீ !
முகவரி தேட
மழைத்துளியாய் மாறும்
கார்மேகமோ நீ !
விண்ணில் உன் அழகு முகமாம்
வானவில்லை
வரைந்துகாட்டும்
விண்மேகமோ நீ !
நான் தொலைதூரம்
சென்றாலும் தொடர்ந்து
வருவாயோ நீ !
நட்சத்திரங்களை
அடைகாக்கும்
குளிர்பதன
பெட்டியோ நீ !
சோகங்கள் சொல்லாமல்
கலைவதேன் ?
மேகங்களே நீ
சொல்லாமல்
கலைவதை பார்த்தா !
பலபெயர்களை சூட்டி
பாரினை ஆளும்
படுசுட்டி நீ !
கவிதை: உஷா விஜயராகவன்
கதிரவனும் நிலவும்
மறைந்து மறைந்து
விளையாடும்
வெண்மேகமோ நீ !
வெண்பட்டாடை உடுத்தி வளையவரும்
நீலமேகமோ நீ !
தொலைதூர
தொடமுடியா பஞ்சுமிட்டாய்
ஆனாயோ நீ !
காதலனாம் வானத்தை தழுவிக்கொண்டு
அன்ன நடை பயிலும்
வான்மேகமோ நீ !
முகவரி தேட
மழைத்துளியாய் மாறும்
கார்மேகமோ நீ !
விண்ணில் உன் அழகு முகமாம்
வானவில்லை
வரைந்துகாட்டும்
விண்மேகமோ நீ !
நான் தொலைதூரம்
சென்றாலும் தொடர்ந்து
வருவாயோ நீ !
நட்சத்திரங்களை
அடைகாக்கும்
குளிர்பதன
பெட்டியோ நீ !
சோகங்கள் சொல்லாமல்
கலைவதேன் ?
மேகங்களே நீ
சொல்லாமல்
கலைவதை பார்த்தா !
பலபெயர்களை சூட்டி
பாரினை ஆளும்
படுசுட்டி நீ !
கவிதை: உஷா விஜயராகவன்
4 Comments
Miga miga arumai. Megathul nirpathu pol irukirathu unga kavithai
ReplyDeleteஅருமை... உங்கள் கவிதைக்காக ஒ மேகமே நீ ஒரு பெண்ணாய் உருவெடுத்தாயோ!!.
ReplyDeleteAzhagu kavithai and drawing
ReplyDeleteLovely..
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji