அவளின் குறும்பு
சிரிப்பில் ஆயிரம்
முத்துக்களை சிதற
விடுகிறாள்
சிதறிய முத்துக்களை
கோர்ப்பதா....
சிரிக்கும் நிலவு முகத்தை ரசிப்பதா...
செய்வதறியேனடி !
மரகத கண்களெனும் உன் காந்தப்பார்வையால் நான் இரும்புத்
துகள்களாய் ஆனேனடி !
பிஞ்சு விரல்களால்
எனை நீ தொடும்போது
துள்ளித் தாவும்
மான்குட்டியாய்
ஆனேனடி !
கொவ்வை இதழ்களால் எனை
நீ முத்தமிடும் போது உமிழும் எச்சில் சாறுகளை
அமுதாய் நினைத்து
மகிழ்ந்தேனடி...
உனது இரட்டை சிண்டில் நீ
சிட்டுக்குருவியாய்
ஆனாயடி....
உன் பிஞ்சு நடையில்
மயில் கூட தன்
நடனத்தை மறந்ததடி !
உன் மழலை மொழியில் என்
தமிழ் மொழியை
மறந்தேனடி !
நீ செய்யும் குறும்பே என்
கதைக்கும் என்
கவிதைக்கும்
கருவாகிவிடுகிறதடி
கவிதை: உஷா விஜயராகவன்
சிரிப்பில் ஆயிரம்
முத்துக்களை சிதற
விடுகிறாள்
சிதறிய முத்துக்களை
கோர்ப்பதா....
சிரிக்கும் நிலவு முகத்தை ரசிப்பதா...
செய்வதறியேனடி !
மரகத கண்களெனும் உன் காந்தப்பார்வையால் நான் இரும்புத்
துகள்களாய் ஆனேனடி !
பிஞ்சு விரல்களால்
எனை நீ தொடும்போது
துள்ளித் தாவும்
மான்குட்டியாய்
ஆனேனடி !
கொவ்வை இதழ்களால் எனை
நீ முத்தமிடும் போது உமிழும் எச்சில் சாறுகளை
அமுதாய் நினைத்து
மகிழ்ந்தேனடி...
உனது இரட்டை சிண்டில் நீ
சிட்டுக்குருவியாய்
ஆனாயடி....
உன் பிஞ்சு நடையில்
மயில் கூட தன்
நடனத்தை மறந்ததடி !
உன் மழலை மொழியில் என்
தமிழ் மொழியை
மறந்தேனடி !
நீ செய்யும் குறும்பே என்
கதைக்கும் என்
கவிதைக்கும்
கருவாகிவிடுகிறதடி
கவிதை: உஷா விஜயராகவன்
1 Comments
நொடி பொழுதில் என் மகளின் குழந்தை பருவத்தை கண்டேன்... நல்ல பதிவு...
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji