Happy Journey & Farewell wishes in Tamil || இனிய பயண வாழ்த்துக்கள் || பிரியாவிடை வாழ்த்துக்கள், Friendship quotes in Tamil, Mother's love quotes in Tamil, Father's love quotes in Tamil
பிரிவது என்பது உடளலவில் -உன்
நினைவலைகள் நிலைக்கும் மனதளவில்.....
இனிய பிரியா விடை நல்வாழ்த்துக்கள் !
விடை பெற மனமில்லை!.
உன்னுடன் பழகிய நாட்களை மனதில் சுமந்ததால்....
இனிய பயண வாழ்த்துக்கள் !
நாம் மீண்டும் சந்திப்போம்!
நம் நட்பினை
புதுப்பிப்போம் !
என்று இன்னமும் நினைக்கிறது...
நம் நட்பின் உறுதி.
இனிய பிரியா விடை நல்வாழ்த்துக்கள் !
பாடித்திரிந்த பறவைகளே !
பசுமை நிறைந்த
நினைவுகளே !
பழகிக் களித்த
தோழர்களே!
நாம் பறந்து செல்கின்றோம் !..
இனிய பிரியா விடை நல்வாழ்த்துக்கள் !
தாயை பிரியும் சேயைப் போல்
நானும் நீயும் பிரிகின்றோம் !
இனிய பயண நல்வாழ்த்துக்கள் !
என் கைகள் கைவீசி விடை கொடுத்தாலும்
என் விழிகள் நீரை தேக்கி விடைதர மறுக்கிறது !.
இனிய பயண நல்வாழ்த்துக்கள் !
கவிதை: உஷா விஜயராகவன்
1 Comments
The content is being understood easily and gives us the positive feelings.
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji