Get motivated by reading - Kavikkuyil's Latest Tamil motivational Quotes
சாதிக்க தூண்டும் சிந்தனை துளிகள்
பெண் மான்கள் அல்ல
ஒளி வீசப் போகும்
விண் மீன்கள் !
வெற்றி இலக்கை
அடைய தோல்விகள்
படிக்கட்டுகள் !
எதிலும் வாழ பழகிக்கொள்
அப்போது தான்
எதையும் தாங்கும்
இதயம் வரும் !
வியர்வை துளியை
அதிகப்படுத்து
உன் வெற்றியின்
சின்னம் அது !
பயத்தையும்
தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள்
காலடியில் !
இருளான வாழ்க்கை
என்று எண்ணாதே
கனவுகள் முளைப்பது
கூட இருளில் தான் !
உன்னால் எதையும்
சாதிக்க முடியும்
என்று நம்பு
முயற்சிக்கும் அனைத்தும்
வெற்றியே !
விட்டில் பூச்சிகளில்லை
நீங்கள் இறக்க
வளரும் பட்டுப்
பூச்சிகள் நீங்கள் !
அடுத்தவரோடு
ஒப்பிட்டு உனை நீ
தாழ்த்திக் கொள்ளாதே
உலகத்தில் சிறந்தது
உனக்கு நீயே !
மனதில் உறுதி
இருந்தால்
வாழ்க்கையும்
கோபுரமாகும் !
கவிதை: உஷா விஜயராகவன்
0 Comments
We write for you. So Please provide your feedback
Emoji