💕ஹைக்கூ காதல் கவிதைகள் 💞 - பகுதி 3

1. 💘காதல்  என்பது அன்பால் வரும் 
         அற்புதமான ஒரு உணர்வு. ...
         உணர்வு  இல்லாத 
         மனிதர்களே இல்லை !💘


2. 💕
காதல்  புனிதமானது.
         புனித  மழைத்துளியில்
         நனையாதவர்கள்
         யாருமில்லை  !எவருமில்லை !💕


3. 💞
தேன் பருக வட்டமிடும் 
         வண்ணத்துப் பூச்சி போல 
         உன் இதயத்தில்  மலர
         உன்னையே சுற்றி வரும்  
         காதல் பூச்சி நான்  !💞


4. 💗
மலையில் மேகம் தூங்க ......
         மலரில்  வண்டு தூங்க......
         தென்றலில் பயிர்கள் தூங்க. ....
         நான் தூங்க தருவாயோ
         உன் தோள்களை  !💗


5. 💔
காதலிப்பது தவறல்ல.....
         ஒருவரை ஒருவர் 
         புரிந்து  கொள்ளாமல்
         காதலிப்பது தவறு !💔


6. 💞
நீ எதைக் கேட்டாலும் நான் தருவேன்  
         என்  உயிரைத் தவிர. ....
        அது உன்னிடம் இருக்கிறதே
         என் செய்வேன் !💞


7. 💖
நான் கவிதை எழுத
        அமர்ந்தால்
         சிந்தனையாகிறது
         உன் நினைவு  !💖


8. 💖
காதல்  என்பது 
         மணலில் வரையப்பட்ட 
         ஓவியம்  அல்ல
         மனதில் செதுக்கப்பட்ட 
         சிற்பம் !💖


9. 💞காதலில் காத்திருப்பது 
         சுகம் தான்
        அதற்காக  அடுத்த 
         ஜென்மம்  வரை
         காத்திருக்க  விடாதே  !💕

10. 💞நான்  எதை வேண்டுமானாலும் 
           விட்டு  கொடுப்பேன்
           உன்னை மட்டும் 
           யாருக்காகவும் எவருக்காகவும்
           விட்டு கொடுக்க மாட்டேன்  !💕



கவிதை: உஷா விஜயராகவன்

கலை: தன்யஸ்ரீ ரகுநாதன்

Post a Comment

3 Comments

  1. அழகான நிலா கவிதைகளை வரிகளை படிக்க 👇

    Nila kavithai in tamil

    ReplyDelete

We write for you. So Please provide your feedback

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)