Independence day quotes, Independence day quotes in Tamil, Independence day wishes,
சுதந்திர தின வாழ்த்துக்கள்
நம் தேசம்
இந்திய தேசமே
நம் மக்கள்
இந்திய மக்களே
ஒன்று பட்டு
செயல்படுவோம்
வாழ்க பாரதம் !
வந்தே மாதரம் !
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
தேசியக் கொடியின்
வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம்
ஒன்றல்லோ....
பறவைகள் பலவிதம்
பறக்கும் வானம்
ஒன்றல்லோ...
நம் மக்கள் பலவிதம்
நம் தேசம்
ஒன்றல்லோ .....
வாழ்க நம் தேசம் !
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
நாம் சுவாசிப்பது
இந்திய மண்ணின்
மூச்சுக் காற்றை
பேணிக் காப்போம்
இந்திய மண்ணை
வீர முழக்கமிடுவோம்
வந்தே மாதரம் !
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
சாதி மத பேதமின்றி நம்
தேசத்தை நேசிக்கும் நம்
மக்கள் அனைவருக்கும்
சுதந்திர தின நல்
வாழ்த்துக்கள் !
மந்திரத்தாலும்
தந்திரத்தாலும்
வந்ததில்லை
இந்த சுதந்திரம்
உதிரத்தாலும்
உயிர் தியாகத்தாலும்
கிடைத்தது இந்த
சுதந்திரம் !
வாழ்க பாரதம் !
சுதந்திர தின நல் வாழ்த்துகள்
சுதந்திர தின நல்
வாழ்த்துக்கள்
அந்நிய இருட்டின்
அரக்கக் கூத்து
இன்றோடு முடிந்தது என
சங்கே முழங்கு !
தியாகிகளின்
வீர முழக்கத்தில்
பிறந்தது நம்
இந்திய தேசமே !
இந்திய சுதந்திர
தினம் வாழியவே !
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
வெள்ளையெனும்
அரக்கர்களை
வெளியேற்றினோம்
அந்நியரிடமிருந்து
நம் தேசத்தை
கைப்பற்றினோம்
வாழ்க சுதந்திரம் !
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
எல்லா மொழியும்
நம் மொழி
எல்லா மதமும்
நம் மதம்
எல்லா மக்களும்
நம் உடன் பிறப்பு
என்றே கூறும்
நம் தாய் திருநாடு
பாரத மாதா கீ
ஜெய் !
ஏழு (7 ) எழுத்து
வந்தே மாதரம்
நான்கு (4 )எழுத்து
இந்தியா
இரண்டும் சேர்ந்தது தான்
நம் சுதந்திரம்
74வது ஆண்டு
சுதந்திர தின நல்
வாழ்த்துக்கள்
கவிதை: உஷா விஜயராகவன்
Also Read this article on Indian Independence: https://renuka21renu.blogspot.com/2020/08/blog-post_14.html
1 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji