Kavikkuyil's Haiku kadhal kavidhaigal part 5 - காதல் என்பது அற்புதமான ஒரு
உணர்வு!!! படியுங்கள் காதல் கவிதைகளை...
1. 💓ஆசைகள் கடலில்
பொங்கி எழ
வெட்கங்கள் அலையில்
அடித்துச் செல்ல
அச்சங்களும்
கரையொதுங்க
காதலும் முத்தமானதே💓!!
2. 💔காதலில் வரும்
சிறு சிறு ஊடல்கள்
காதலை வலிமைப்
படுத்தவே !
காதலைப் பிரிப்பதற்கல்ல💔!!
3. 💛உன்னைக் காண
அடம்பிடிக்கும் மனதை
சமாளிக்கிறேன்
நீ வருவாயென💛!
4. 💕ஏட்டில் எழுதும்
எதுவும் மன ஏட்டில்
பதியவில்லை
உன் நினைவுகளைத்
தவிர💕!
5. 💖உன்னை பற்றி
எழுதும் கவிதைகளை
மனதிற்கே அஞ்சல்
செய்கிறேன்
வேறு யாரும்
படிக்காமலிருக்க💖!!
6. 💗அன்பே நீ
விளக்காக இருந்தால் நான்
சுடராக இருப்பேன்💗!
7. 💘உன்னை சுமந்து கொண்டு
வெகு காலம் இருக்க முடியாதடி....
விடை சொல்லடி நீ !
அந்த நினைவுச்
சுமைகளை இறக்கி
வைக்க...💘
8. 💞உன்னில் நான்
என்னில் நீ
கைகோர்த்து நாம்💞!
9. 💙என் உணர்வும்
என் இதயமும்
உன்னிடத்தில்
ஒரு வழிப் பாதையில் நீ
வழித்துணையாக
வருவாயென💙!
10. 💚 எழுதிடுவோம்
புதுக்கவிதையை
கண்ணுக்குள்
கலந்து
இதயத்தில் நுழைந்து💚!
கவிதை: உஷா விஜயராகவன்
1 Comments
அருமையான எளிமையான படைப்பு
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji